ஆர்வி பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளிக்கு இந்திய பார் கவுன்சில் அனுமதி

சட்டப் பள்ளி டீனாக பேராசிரியர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி நியமனம்
ஆகஸ்ட் 2023 முதல் இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்கள் துவக்கம்
சிறந்த மாணவர்களுக்கு தகுதி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்குகிறது

ஆர்வி பல்கலைக்கழகம் துவக்கி உள்ள சட்டப் பள்ளியின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்எல்பி மற்றும் பிபிஏ எல்எல்பி பாடத்திட்டங்களுக்கு சட்டக் கல்வி ஒழுங்குமுறை ஆணையமான இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

இந்த சட்டப் பள்ளியின் பாடத்திட்டங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளன. இது ஆர்வி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6வது பள்ளியாகும். சட்டத் துறையில் சிறந்து விளங்கும் வகையில் அறிவு, திறன்கள் மற்றும் நெறிமுறை மதிப்புகளுடன் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கும் வகையில் இதன் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்எல்பி. (ஹானஸ்) அல்லது பி.பி.ஏ. எல்.எல்.பி. (ஹானஸ்),எல்எல்எம் மற்றும் பிஎச்.டி உள்ளிட்ட பாடத்திட்டங்களில் சேரலாம். இளங்கலை, முதுகலை மற்றும் முழுநேர/ பகுதி நேர பிஎச்.டி. பாடங்களுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் https://admissions.rvu.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை மாணவர்களுக்கான சேர்க்கை RVSAT நுழைவுத் தேர்வு /CLAT/LSAT/CUET நுழைவுத் தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மேலும் இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் 75 மாணவர்களுக்கு 25 முதல் 100 சதவீத கல்வி உதவித் தொகையை முதல் ஆண்டில் இருந்தே வழங்குகிறது.

இது குறித்து ஆர்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், சட்டப் பள்ளியின் டீன் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி கூறுகையில், எங்கள் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளியைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது தற்போதுள்ள ஐந்து பள்ளிகளுடன் இணைந்து, பன்முக படிப்பிற்கான எங்களின் உறுதிப்பாட்டை மேலும் வலிமைப்படுத்துகிறது. எங்களின் இந்த சட்டப் பள்ளியின் மூலம், நீதி, ஒருமைப்பாடு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்தும் எதிர்கால வழக்கறிஞர்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் எங்கள் மாணவர்கள் வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றுடன் சட்டம் தொடர்பாகவும் அறிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட உள்ளன. அத்துடன் கார்ப்பரேட் மற்றும் சட்ட நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, எங்கள் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற கற்றல் வாய்ப்புகளை நாங்கள் வழங்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

45 பட்டப் படிப்புகளுக்கு 2023–24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஆர்வி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் பட்டப்படிப்பில் சேர தகுதி உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

ஆர்வி பல்கலைக்கழகத்தின் 2023-24–ம் ஆண்டிற்கான சேர்க்கை துவங்கி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வணிகப் பள்ளி, பொருளாதார பள்ளி, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி, வடிவமைப்பு மற்றும் புதுமைப் பள்ளி, கலை மற்றும் அறிவியல் பள்ளி மற்றும் தற்போது புதிதாக துவக்கப்பட்டுள்ள சட்டப் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்.

இப்பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பன்முக படிப்பை வழங்குவதோடு, அனுபவ கற்றல் சூழலை வழங்குகிறது, விமர்சன மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறது. மாறிவரும் கால நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாணவரும் தயாராகும் வகையில், பயனுள்ள தகவல் தொடர்பு, விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் அதன் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உலகத்தரம் வாய்ந்த முழுமையான கல்வியுடன் மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இப்பல்கலைக்கழகம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. இது கற்பித்தல், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது.

இங்கு 45 பாடத்திட்டங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்திட்டங்களில் சேர்ந்து படிக்கலாம். இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆர்வங்களைக் கண்டறியவும், அவர்களின் ஆர்வத்தைத் தொடரவும் வெவ்வேறு பாடங்கள் குறித்து ஆய்வு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் https://admissions.rvu.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இளங்கலை படிப்பில் சேருவதற்கான தகுதி சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐபி, கேம்பிரிட்ஜ், மாநில பள்ளிகள் மற்றும் பிற அரசு பள்ளிகளில் 10 மற்றும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RVSAT நுழைவுத் தேர்வு மற்றும் ஆர்வி பல்கலைக்கழகத்தின் தேர்வு செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும். RVSAT என்பது இப்பல்கலைக்கழகத்தின் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். பல்கலைக்கழகம் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

ரூ.10 கோடி கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு
2023-24–ம் ஆண்டில் தகுதி ஊக்கத் தொகையாக ரூ 10 கோடியை இப்பல்கலைக்கழகம் ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பலன் பெறுவார்கள். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளியில் படிக்கும் சுமார் 200 பி.டெக். மாணவர்கள் மற்றும் 50 பி.எஸ்சி. மாணவர்கள் தவிர, சட்டப் பள்ளியில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.எல்.எல்.பி மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி. அத்துடன் எல்.எல்.எம். படிப்புகளை படிக்கும் 75 மாணவர்களும் பயன்பெறுவார்கள். இந்த உதவித்தொகையானது வடிவமைப்பு மற்றும் புதுமைப் பள்ளி, கலை மற்றும் அறிவியல் பள்ளி ஆகியவற்றில் தலா 40 மாணவர்களை உள்ளடக்கி உள்ளது. வணிகப் பள்ளி மற்றும் பொருளாதார பள்ளியில் பி.பி.ஏ, பி.காம் மற்றும் பி.ஏ. (பொருளாதாரம்) படிக்கும் 80 மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க இப்பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.

இந்த கல்வி உதவித் தொகையானது, திறமையான மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்வியை தொடரவும், எதிர்காலத் தலைவர்களின் திறமையை உருவாக்கவும் உதவுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 100 சதவீதம், 50 சதவீதம் மற்றும் 25 சதவீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2023-2024–ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளதால், இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சியாட்டில் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியுடன்
ஆர்வி பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆர்வி பல்கலைக்கழகத்தின் 5 மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி உதவித் தொகை அறிவிப்பு

ஆர்வி பல்கலைக்கழகம் (RVU) அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பல்கலைக்கழகத்துடன் (SU) முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இங்கு படிக்கும் சட்டப் பள்ளி மாணவர்கள் சியாட்டில் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் உயர் சட்டப் படிப்பைத் தொடரலாம்.

மேலும் சியாட்டில் பல்கலைக்கழகத்துடன் எல்எல்.எம் படிப்பிற்கான கூட்டாண்மை மற்றொன்று எல்.எல்.எம். படிப்பிற்கான ஒப்பந்தம் என 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, மாநாடு, விரிவுரை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள், கூட்டு வெளியீட்டுத் திட்டங்கள் மற்றும் நூலகப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆர்வி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரண்டு கூட்டு திட்டங்கள் வழங்கப்படும். ஒன்று எல்.எல்.எம். பாதை திட்டம் என்னும் இரட்டை பட்டப்படிப்பு திட்டமாகும். இதன் மூலம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்பை ஆர்வி பல்கலைக்கழகத்திலும், எல்எல்.எம். படிப்பை சியாட்டில் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் படிக்கும் 5 சிறந்த மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இரண்டாவது ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் முதலாம் ஆண்டு எல்எல்.எம் படிப்பை ஆர்வி பல்கலைக்கழகத்திலும், 2ம் ஆண்டு எல்எல்.எம் படிப்பை சியாட்டில் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம். இரண்டு வருட முடிவில், மாணவர்களுக்கு இரண்டு எல்.எல்.எம். பட்டங்கள், ஒன்று ஆர்வி பல்கலைக்கழகத்தாலும், மற்றொன்று சியாட்டில் பல்கலைக்கழகத்தாலும் வழங்கப்படும்.ஆர்வி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் விதமாக சியாட்டில் பல்கலைக்கழகம் ஐந்து மாணவர்களுக்கு 50% கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.சியாட்டில் பல்கலைக்கழகத்தில் 24 கிரெடிட்களுக்கு மொத்த கல்விக் கட்டணம் சுமார் 44 ஆயிரம் டாலர் ஆகும். உதவித்தொகையுடன், கல்விக் கட்டணம் சுமார் 22 ஆயிரம் டாலர் ஆகும்.

பள்ளிகள் பற்றி: கலை மற்றும் அறிவியல் பள்ளியின் முக்கிய நோக்கம் தாராளமய கற்றலை மறுவடிவமைப்பதாகும். இது நான்கு ஆண்டு இளங்கலை படிப்பு (B.L.A.) மூன்றாம் ஆண்டு இறுதியில் B.Sc உடன் வெளியேறும் விருப்பத்துடன் வழங்குகிறது. சுற்றுச்சூழல் அறிவியல்/உளவியல்/திரைப்படம் தயாரிப்பில் அல்லது பி.ஏ. திரைப்பட ஆய்வுகள்/இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்/இந்திய ஆய்வுகள்/அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள்/தத்துவம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை வழங்குகிறது.

வடிவமைப்பு மற்றும் புதுமைப் பள்ளியானது வடிவமைப்பு கல்வியை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நான்கு வருட B.Des பட்டப் படிப்பை வழங்குகிறது. தகவல் தொடர்பு வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, இடஞ்சார்ந்த மற்றும் உள்துறை வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவ வடிவமைப்பு ஆகிய 4 பட்டப்படிப்புகள் இதில் உள்ளன. மேலும் இரண்டு வருட M.Des பட்டம் பயனர் அனுபவ வடிவமைப்பில் நிபுணத்துவத்தை வழங்குகிறது.

இது பல்வேறு கற்பித்தல் மாதிரிகளில் இருந்து சிறந்த வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் இதில் அறிவு உருவாக்கம், அறிவுப் பரவல் மற்றும் அறிவு பயன்பாடு ஆகியவை இணைந்து செயல்படும் மற்றும் ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குகிறது.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு பரந்த அளவிலான பாடத் திட்டங்களை வழங்குகிறது. இது தேர்வு சார்ந்த கற்றலைக் காட்டிலும் அனுபவமிக்க, முழுமையான கற்றல் மூலம் 21–ம் நூற்றாண்டின் திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் 4 நான்கு பி.எஸ்சி (ஹானஸ்) கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், டிசிஷன் சயின்ஸ் ஆகிய பாடங்களும், பி.டெக் (ஹானஸ்) பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் மற்றும் பி.சி.ஏ.(ஹானஸ்) மென்பொருள் தயாரிப்பு பொறியியல் பாடத் திட்டத்தை வழங்குகிறது. பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக எம்.டெக் டேட்டா சயின்ஸ் 2–3 ஆண்டு முதுகலை பாடத்திட்டத்தையும் வழங்குகிறது.

பொருளாதார பள்ளியானது பொருளாதாரத் துறையில் பி.ஏ. (ஹானஸ்) பொருளாதாரம் மற்றும் எம்.ஏ. பொருளாதாரம் ஆகிய இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களை வழங்குகிறது. ‘உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க நிஜ உலகின் பொருளாதாரம்’ பற்றிய வலுவான ஒழுக்கமான புரிதலுடன் விமர்சன சிந்தனை கொண்ட நபர்களை உருவாக்குவதை இப்பள்ளி நோக்கமாகக் கொண்டுள்ளது.

வணிகப் பள்ளியானது, நான்கு ஆண்டு இளங்கலை பாடத் திட்டங்களுடன், மூன்றாம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறும் விருப்பங்களுடன், வளர்ந்து வரும் வணிகச் சூழலைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாடத்திட்டங்கள் அதன் தொலைநோக்கு பார்வையான ‘நிர்வாகக் கல்வியை மறுபரிசீலனை செய்தல்: அறிதல், செய்தல், புதுமைப்படுத்துதல்.’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பி.பி.ஏ. (ஹானஸ்) நிதி/தொழில்முனைவு/சந்தைப்படுத்தல்/வணிகம்/மனித வள மேலாண்மை அல்லது பி.காம் (ஹானஸ்) மற்றும் நிதி & கணக்கியல்/வங்கி & காப்பீடு/செல்வ மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சட்டப் பள்ளியானது புதுமையான சட்டக் கல்வியை வழங்கும் வகையில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களை வழங்குகிறது. இது மாணவர்களுக்கு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்.எல்.பி. (ஹானஸ்) அல்லது பி.பி.ஏ. எல்.எல்.பி. (ஹானஸ்) அல்லது எல்.எல்.எம். படிப்புகளை வழங்குகிறது.

ஆர்வி பல்கலைக்கழகம் பற்றி: ஆர்வி கல்வி நிறுவனங்களின் 83 ஆண்டுகால வளமான பாரம்பரியத்தின் ஆதரவுடன், கடந்த 2021–ம் ஆண்டு ஆர்வி பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், தற்போதைய நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் சார்ந்த, உலகளாவிய பல்கலைக்கழகமாக இது உள்ளறது. மேலும் இப்பல்கலைக்கழகம் உயர்தர, தாராளமயக் கல்வியை பன்முகப் பாடத்திட்டத்துடன் வழங்குகிறது. இப்பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி. பாடத்திட்டங்களுடன் வணிகப் பள்ளி, பொருளாதார பள்ளி, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி, வடிவமைப்பு மற்றும் புதுமைப் பள்ளி, கலை மற்றும் அறிவியல் பள்ளி மற்றும் தற்போது புதிதாக துவக்கப்பட்டுள்ள சட்டப் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளைக் கொண்டுள்ளது. இது 100 புகழ்பெற்ற வெளிநாட்டு மற்றும் தேசிய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டாண்மையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *