யோகா ஆசிரியர்கள் சார்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும் மாநில பொதுச் செயலாளர் வே. காசிநாததுரை. கூறியதாவதுயோகா ஆசிரியர்கள் சார்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். நடைபெற்று கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி அரசு கல்லூரியிலும் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் யோக ஆசிரியர் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் அறநிலைத்துறைகளிலும் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது அனைத்து விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்கள் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வெளியேறி விட்டார்கள்.

மீண்டும் அவர்களை விளையாட்டு துறைகளில் நியமிக்க மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல யோகா துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து யோகா பயிற்சிகளை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா போட்டியே சேர்க்க வேண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் யோகா கல்விக்கு தனி கவணம் செலுத்தி யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சென்ற ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் கூட்டத்திற்கு தோகா ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் அரசு பணி யோக ஆசிரியர்கள் அனைவரும் கூடத்திற்கு கலந்து கொண்டு சிறப்பு நிறைவேற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *