அனிருத் தபா தலைமையில் சென்னையின் எஃப்சி மெரினா கடற்கரையை சுத்தம் செய்தது
இந்த தூய்மை பணியில் அணியின் நட்சத்திர வீரர்களான எட்வின், ங்வான், டுக்கர், கரிகாரி ஆகியோடன் தலைமைப் பயிற்சியாளர் பிரடாரிக், உதவிப் பயிற்சியாளர் ஜர்மதியும் பங்கேற்றனர்.
சென்னை, மார்ச் 12, 2023: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் பிரதான அணிகளுள் ஒன்றான சென்னையின் எஃப்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் இயக்கத்தை நடத்தியது. கிளப்பின் முதன்மை ஸ்பான்சர் அப்பல்லோ டயர்ஸுடன் இணைந்து இந்த பணியை சென்னையின் எஃப்சி மேற்கொண்டது. மனிதர்கள் மற்றும் மற்ற எல்லா உயிரினங்களும் ரசிக்கவும் இணைந்து வாழவும் நகரத்தின் மிகப்பெரிய கடற்கரையை முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பது இந்த பணியின் நோக்கமாகும்.
சென்னையின் எஃப்சி அணியின் கேப்டன் அனிருத் தாபா கூறும்போது,”கடற்கரையை சுத்தம் செய்வது பூமிக்கு மிகச் சிறிய முறையில் நாம் திரும்ப செலுத்தும் நன்றிக்கடனாகும். மேலும் மக்கள் தூய்மையான மற்றும் அதிக சுகாதாரமான சூழலை அனுப விக்க எங்கள் பணி உதவும். கிளப் மற்றும் அப்பல்லோ டயர்ஸின் இந்த முயற்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மெரினா கடற்கரையுடன் சென்னையின் எஃப்சி உடைக்க முடியாத தொடர்பைக் கொண்டுள்ளது, இது மெரினா அரங்கம் (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்) மற்றும் ரசிகர்களால் மெரினா மச்சான்ஸ் என்று சென்னையின் எஃசி அழைக்கப்படுவதே இதற்கு சான்று.
அனிருத் தாபாவைத் தவிர, சென்னையின் எஃப்சி அணியின் முன்னணி நட்சத்திரங்களான எட்வின் சிட்னி வான்ஸ்பால், ஆகாஷ் சங்வான், ஜூலியஸ் டுக்கர் மற்றும் குவாம் கரிகாரி ஆகியோரும் அப்பல்லோ டயர்ஸ் பேட் ரோடு பட்டீஸுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் கலந்து கொண்டனர். பேட் ரோடு பட்டீஸ் குழுவானது சென்னையின் எப்ஃசி ஹோட்டலில் இருந்து ஸ்டேடியம் வரை மேற்கொள்ளும் பயணங்களைத் தலைமையேற்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிரடாரிக் மற்றும் உதவி பயிற்சியாளர் மட்கோ ஜர்மதி ஆகியோரும் தூய்மை பணி இயக்கப் பணிகள் போது உடனிருந்தனர்.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆறு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் தங்களால் இயன்ற கழிவுகளைச் சேகரித்தனர். பூமியைப் பாதுகாக்கவும், நிலையான நடைமுறைகளை செயல்படுத்தவும் உறுதிமொழியுடன் இந்த தூய்மை பணி அமர்வு முடிந்தது.

சென்னையின் எஃப்சி அணியானது விரைவில் கேரளாவில் நடைபெற உள்ள ஹீரோ சூப்பர் கோப்பை 2023 தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் சென்னையின் எப்ஃசி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிராக மோத உள்ளது.