செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தையூர் கிராமத்தில் இயங்கி வரும் பிரகிருதிக் பெயிண்ட் கம்பெனியில் மகளிர் தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தையூர் கிராமத்தில் இயங்கி வரும் பிரகிருதிக் பெயிண்ட் கம்பெனியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது
நிர்வாக இயக்குனர் திருமதி. பிரதிக்க்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கேக்குகள் வெட்டி பூங்கொத்துகள் கொடுத்து பொன்னாடைகள் அணிவித்து மிக சிறப்பாக நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
பிரகிருதிக் பெயிண்ட் கம் பெனியின் நிர்வாக இயக்குனர் திருமதி பிரதிக்க்ஷா பேசுகையில் கேன்சர் வருவதை தடுக்கும் ஆர்கானிக் பெயின்ட்
தென்னிந்தியாவில் முதல் முறையாக மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பெயிண்ட் கேன்சர் வருவதை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது என்றும் மேலும் அறைகளுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என்றும் எந்த விதமான வாசனை வராது தலைவலி போன்ற பிரச்சனைகள் பெயிண்டர்களுக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.

மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் இடமிருந்து மாட்டு சாணத்தை வாங்கி அதிலிருந்து பெயிண்ட் செய்யப்படுவதால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார். இதில் கேளம்பாக்கம் எஸ் பி ஐ வங்கி மேலாளர் அகிலன், அனைத்து பெயிண்டர் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் மாநில செயலாளர் கனககேஸ்வரன், மாநில பொருளாளர் சுரேஷ்பாபு, மாநில இணைச் செயலாளர் ரவி கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெயிண்ட் ஏஜெண்டுகள் கலந்து கொண்டு மகளிர் தினம் விழா மற்றும் பெயிண்ட் சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை விளக்கிக் கூறினார்கள்.இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு : 6380132758

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *