தமிழக மருத்துவர் அருண்குமாரின் சேவையை பாராட்டிய உத்தரக்கண்ட் முதல்வர்

புண்ணிய பூமி ஆன உத்தரகாண்டின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு முதலுதவி மற்றும் மருத்துவ சேவையாற்றி வரும் சிக்ஸ் சிக்மா ஹெல்த் கேர் அமைப்பினரை உத்தரகாண்ட் முதல்வர் கௌரவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கேதார்நாத் போன்ற புகழ்பெற்ற மலைக் கோயில்கள் உள்ளன ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை சிக்ஸ் சிக்மா ஹெல்த் கேர் என்ற தன்னார்வ அமைப்பு சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது .

அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் சேவையை பாராட்டு விதமாகவும் உத்தரகாண்ட் முதல்வர் மாண்புமிகு புஷ்கர் சிங் டாமி அவர்கள் தன்னுடைய இல்லம் அழைத்து பாராட்டி மகிழ்ந்தார்.

இந்த நிகழ்வின்போது பேசிய மாண்புமிகு முதலமைச்சர் புஷ்கர் சிங் கூறியதாவது, மிகப்பெரிய நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது உத்தரகாண்ட் மாநிலம். ஆண்டுதோறும் உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் ஆன்மீக சுற்றுலா வந்து செல்கிறார்கள் . 1200 அடிக்கு மேல் அமைந்திருக்கும் கோயில்களுக்கு மைனஸ் எட்டு டிகிரி வெப்ப நிலையில் மருத்துவ உதவி ஆற்றி வரும் சிக்ஸ்சிக்மாவின் செயல்பாடுகள் வியப்புக்குள் ஆற்றுகிறது எனவும் சிக்ஸ் சிக்மா ஹெல்த் கேர்கு வளமான எதிர்காலம் காத்திருப்பதாகவும் மேலும் எல்லா நிலையிலும் உத்தரகாண்ட் மாநில அரசு சிக் சிக்மா ஹெல்த் கேர் உடன் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் இந்த நிகழ்வின்போது சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சார்ந்த மருத்துவர் அருண்குமார் உள்பட சிக் சிக்மா ஹெல்த் கேர் அமைப்பினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

Dr_Arunkumar

அப்போது சிக்சிமா ஹெல்த் கேர் தலைவர் மருத்துவர் பிரதீப் பர்டுவாஜ் பேசும்போது மௌண்டைன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டை அமைப்பது குறித்தும் , மருத்துவ சேவைகளை சபரிமலை போன்ற மலைக் கோயில்களுக்கு விரிவு படுத்துவது குறித்தும் பேசினார் நிகழ்வின்போது
இயக்குனர் மருத்துவர் அனிட்டா பர்டுவாஜ் உள்பட மேலும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *