பூர்விகாவின் புதிய அத்தியாயம் || The Grand Launch of Poorvika Appliances @ Chromepet
இந்தியாவின் முன்னணி டெக்ரீடைலரான பூர்விகா நிறுவனம் தற்போது வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனையிலும் களமிறங்கி உள்ளது . டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், கிட்சன் அப்ளையன்சஸ் என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கான அப்ளையன்சஸ் கிளைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் துவங்கியது, அதன் தொடர்ச்சியாக திநகர் மற்றும் குரோம்பேட்டையிலும், பூர்விகா அப்ளையன்சஸ் புதிய கிளைகளை இன்று முதல் துவங்க உள்ளது திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக அதிரடியான தள்ளுபடிகள், சிறப்பு பரிசுகள் என பூர்விகா அப்ளையன்சஸ்-ன் அறிவிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூர்விகா நிறுவனம் 2004-ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில், சிறிய கடையாக தொடங்கப்பட்டது தன்னுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தின் மூலம் இன்று தமிழகம் தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என இந்தியா முழுவதும் தனது கிளைகளை திறந்து, 475-க்கும் மேற்பட்ட கிளைகள், 4000-க்கும் அதிகமான ஊழியர்களுடன் இந்தியாவின் நம்பர் 1 மொபைல் விற்பனையாளர் என்கிற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.ஆன்லைன் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மிக பெரிய ஷோரூம்கள், தரமான பொருட்களினால் மக்களின் நேரடி தேர்வாக பூர்விகா நிறுவனம் இருந்து வருகிறது.