கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை

கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை. மிஸ் இந்தியா பட்டம் வெல்வதே இலட்சியம் என பேட்டி.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர் இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்தவர். சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்தமுயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்ப்படுத்தி கொண்டார்.

அதன் முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டி இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18ம் தேதி முதல் 21ம் வரை நடந்த மிஸ் தமிழ்நாடு போட்டியில் இந்தியா முழுவதும் 750 பேர் கலந்து கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர்.

நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த ரக்சயா மனோகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *