மாண்புமிகு நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், IIRSI 2022 நிகழ்வை தொடங்கி வைத்தார்
சென்னை, ஜுலை 9, 2022: தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், IIRSI 2022 நிகழ்வை தொடங்கி வைத்தார். கண்ணுக்குள் உட்பதியம் மற்றும் ஒளிக்கதிர்விலக்க அறுவைசிகிச்சை 37-வது கருத்தரங்கான இது, முன்தடுக்கக்கூடிய பார்வைத்திறன் இழப்பிற்கு சிகிச்சையளிப்பது, கண்ணுக்குள் லென்ஸ்கள் உட்பதியம் (IOL) மற்றும் ஒளிக்கதிர்விலக்க அறுவைசிகிச்சை ஆகிய அம்சங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற இந்தியாவின் மிகப்பெரிய செயல்தளமாகவும் இருக்கிறது. இந்தியாவிலுள்ள கண் மருத்துவவியலாளர்களின் சங்கமான IIRSI – ன் இந்த இருநாள் வருடாந்திர கருத்தரங்கு, நாடெங்கிலுமிருந்து 2500-க்கும் அதிகமான கண் மருத்துவவியல் நிபுணர்களையும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 200-க்கும் கூடுதலான பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்புரை நிகழ்த்தும் நிபுணர்களையும் பங்கேற்குமாறு ஈர்த்திருக்கிறது.
பத்மஸ்ரீ பேராசிரியர். டாக்டர். மஹிபால் S. சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் (AIOS) அறிவியல் குழு தலைவர் டாக்டர். லலித் வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை பேராசிரியர் டாக்டர். நம்ரதா ஷர்மா, IIRSI – ன் தலைவர் டாக்டர். ராகினி பரேக் மற்றும் IIRSI – ன் தலைமை செயலாளர் புரொஃபசர் அமர் அகர்வால் ஆகியோர் இக்கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட முக்கிய ஆளுமைகளுள் சிலர்.
“கண் புரை மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சையில் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை” என்ற தலைப்பு மீதும், கண் மருத்துவவியலில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள், கண் அறுவைசிகிச்சை, Yo – கண்மருத்துவவியல் ஆகியவை மீதும் அமர்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெறுகின்றன. டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள் நேரலையாக பங்கேற்பாளர்கள் காண்பதற்காக ஒளிபரப்பு செய்யப்படும். கண்ணின் முன்புற பகுதி மற்றும் சவால்மிக்க அறுவைசிகிச்சை நேர்வுகள் ஆகிய தலைப்புகள் மீதும் விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியன் சொசைட்டி ஆஃப் கார்னியா மற்றும் கெராட்டோ ரிஃப்ராக்டிவ் சர்ஜன்ஸ் ஆகியவற்றின் ஒரு சிறப்பு அமைவும் இந்நிகழ்வின்போது இடம்பெறுகின்றன.