ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் புதிய வாகன விற்பனை கிளை குரோம்பேட்டையில் திறக்கப்பட்டது

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா – வின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் – ஆன ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் புதிய வாகன விற்பனை கிளை இன்று வெள்ளிக்கிழமை ( 06.05.2022 ) மாலை 5 மணியளவில் குரோம்பேட்டையில் திறக்கப்பட்டது ,
இந்த மாபெரும் திறப்பு விழாவில் தலைமை விருத்தினர்களாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு . இ . கருணாநிதி MLA . அவர்களும் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு . ச . அம்பேத்குமார் MLA . அவர்களும் கலந்துகொண்டு விற்பனை மையத்தை திறந்துவைத்தனர் .


மேலும் இத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மஹிந்திராவின் மண்டல விற்பனை மேலாளர் திரு.அஷேஷ் மிஸ்ரா மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல தலைவர் திரு.ஜோசப் அண்ணாதுரை ஆகியோரும் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தனர் .


புதிய ஷோரூம் திறப்பு விழாவில் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு . ராஜேஷ் மற்றும் வாகன சேவை மைய பிரிவு பொது மேலாளர் திரு . வைத்தியநாதன் மற்றும் வாகன விற்பனை பிரிவு பொது மேலாளர் திரு . சத்தியமூர்த்தி மற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *