ஹாக்கி இந்தியா தேர்வுக்குழு உறுப்பினராக முகமது ரியாஸ் தேர்வு
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவருமான என்.முகமது ரியாஸ் ஹாக்கி இந்தியாவின் தேர்வுக் குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று 2 உலக கோப்பை போட்டிகள், 2 ஒலிம்பிக் போட்டிகள், 2 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி) மற்றும் 2 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஆகியவற்றில் விளையாடி உள்ளார் முகமது ரியாஸ்.
இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான ஜூனியர் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக ரியாஸ் பணியாற்றியுள்ளார். இந்தப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
இப்போது ஹாக்கி இந்தியாவின் தேர்வுக்குழு (2022) உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு ஹாக்கி உலக நண்பர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.