சென்னை போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது
சென்னை மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெற்ற இதன் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பிரசிடென்சி ஹேண்ட்பால் அணி 17 – 07 என்ற புள்ளிகளில் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை போலீஸ் அணி 36-21 என்ற புள்ளிகளில் பிரசிடென்சி கிளப் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
சிறந்த கோல் கீப்பராக சுகன்யா (எம்ஜிஆர் ஜானகி கல்லூரி), தினேஷ் (சென்னை ஷூட்டர் அணி), சிறந்த வீரராக சென்னை போலீஸ் அணி வீரர் சூர்யா ஆகியோரும் தேர்வு பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில் இந்திய ஹேண்ட் பால் சம்மேளன சேர்மன் டாக்டர் ராம சுப்பிரமணி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

போலீஸ் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன், தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்க செயலாளர் எம். சிவகுமார், பொருளாளர் உதயகுமார், எஸ்டிஏடி மேலாளர் பாபு ராஜேந்திரன், சென்னை மாவட்ட ஹேண்ட் பால் சங்க செயலாளர் அன்புராஜ் உள்பட பலர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.